Translations and welcome packs

Tamil

நாங்கள், உதவி, ஆதரவு, ஆலோசனை மற்றும் பல வகையான நகர மன்றச் சேவைகள் குறித்த தகவல்களை வழங்குகிறோம். நகர மன்ற வரி மற்றும் குடியிருப்பு நன்மைகள் முதற்கொண்டு சமூகப் பராமரிப்பு, வாகன நிறுத்துமிட வசதி மற்றும் கழிவு மற்றும் மறுசுழற்சி சேவைகள் வரையிலான சேவைகளை வழங்குகிறோம். பதிவாளர் சேவைகள் (பிறப்புகள், இறப்புகள், திருமணங்கள்) பற்றியும், வாக்களிப்பதற்காக பதிவுசெய்வது பற்றியும் கூட நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

எங்களுடைய தொடர்பு மையமான லிவர்பூல் டைரக்ட்-ஐ 233 3000 என்ற எண்ணில் அழைக்கலாம். அது நாளுக்கு24 மணிநேரமும், ஆண்டு முழுவதும் இயங்குகிறது. ஆங்கிலம் உங்கள் முதன்மை மொழி அல்ல என்றால், உங்களுக்காக மொழி மாற்று உரைபெயர்ப்புச் சேவையையும் நாங்கள் வழங்குகிறோம். காது கேளாதோர் அல்லது கேட்டல் திறன் குறைபாடு உள்ளவர்கள் எங்களுடைய உரை தொலைபேசி எண்ணான 225 3275 ஐ அழைக்கலாம்.

எங்களுடைய ஒன் ஸ்டாப் ஷாப்களுக்கும் நீங்கள் வருகை தரலாம். அங்கு பிரிட்டிஷ் சைகை மொழி 2 ஆம் நிலை (British Sign Language Level 2) பயிற்சிபெற்ற ஆலோசகர்கள் இருப்பார்கள். நீங்கள் கேட்டல் திறனில் குறைபாடு உள்ளவர் என்றால், உங்களுக்காக தூண்டுதல் மையங்கள் (induction loops) போன்ற கூடுதல் வசதிகளும் உள்ளன. ஒன் ஸ்டாப் ஷாப்களில் உங்களுக்கு தேவையெனில் மொழி இணைப்பும் கிடைக்கும்.  ஒரு ஒன் ஸ்டாப் ஷாப்பைக் கண்டறியவும்.

ஒன் ஸ்டாப் ஷாப் திறந்துள்ள எந்த நேரத்திலும் நீங்கள் இங்கு வரலாம். ஆனால், நகர மன்ற வரி அல்லது குடியிருப்பு நன்மை தொடர்பான விசாரணைகளுக்கு ஆலோசனை பெற வேண்டுமானால், 233 3016 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் முன்னதாகவே ஒரு சந்திப்புத் திட்டத்தை செய்து கொள்ள வேண்டும்.